Skip to main content

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து "டிக் டாக்" செயலியை நீக்கியது கூகுள்!

BanTikTok

தமிழகத்தில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மட்டுமன்றி வயதானவர்களும், பள்ளி மாணவர்களும் இந்த செயலிக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஆபாச காணொளிகளை வெளியிடவும் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த செயலியில் பகிரப்படும் காணொளிகளில் ஆபாசமும், பல்வேறு சமூகப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

எனவே அதை தடை செய்ய மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

tik tok

இதனை விசாரித்த நீதிமன்றம், "சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும், அரசே உரிய முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

No more TIK TOK App in Google Playstore in India.

tik tok

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.