Skip to main content

கூகுள் ப்ளே ஸ்டோர் வழங்கும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கேம் விருது - PUBG

கூகுள் ப்ளே ஸ்டோர் வழங்கும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கேம் விருது - PUBG

கூகுள் ப்ளே ஸ்டோர் வழங்கும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கேம் விருதை PUBG வென்றுள்ளது. இதற்காக இந்த கேம் விளையாடுபவர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்றை PUBG அறிவித்துள்ளது.

அதிக வருவாய் ஈட்டிய கேம் - PUBG

கேம் உலகின் ராயல், ட்ரெண்ட் கேம்கள் அனைத்தும் இந்த 2018 ஆம் ஆண்டில் PUBG இடம் படுதோல்வி அடைந்து வருகின்றன. சமீபத்தில் கூகுள் ப்ளே லிஸ்ட் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் அதிக வருவாய் ஈட்டிய கேம் என்ற அங்கீகாரம் PUBG விளையாட்டிற்கு வழங்கப்பட்டது.

PUBG வருவாயில் மட்டுமல்லாது கூகுள் வழங்கும் சிறந்த கேம்- 2018 என்ற விருதையும் தற்போது தட்டிச் சென்றுள்ளது.

வெற்றியை கொண்டாடும் வகையில் சிறப்புப் பரிசு

இதுபோக Fan favourite Game, Overall Game of the Year ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகமான PUBG, தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டது.

தற்போது மூன்று சீசன்களை நிறைவு செய்து 4-வது சீசனையும் அறிமுகப்படுத்தி உள்ள PUBG இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், தனது ப்ளேயர்ஸ்க்கு  சிறப்புப் பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் PUBG விளையாடுபவர்கள் 2 டாலர்கள் வரையில் கேம் க்ரெடிட் மூலம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

PUBG was named as the best games of 2018 on google playstore.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.