Skip to main content

கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேர 4.5 கோடி டாலர் ஒதுக்கீடு!

amit singhal

நிறுவன பணியாளரிடம் தகாத முறையில் நடந்ததற்காக பதவி விலகிய கூகுள் நிறுவன உயர் அதிகாரிக்கு 4.5 கோடி டாலர் (சுமார் ரூ.315 கோடி) தொகை வழங்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூகுள் தேடுதல் பொறி (Google Search Engine) பிரிவின் துணைத் தலைவராக பதவி வகித்தவர் அமித் சிங்கால்.

இவர் 2016-ம் ஆண்டு இப்பதவியில் இருந்து விலகினார்.

இவர் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்ட தொகையை கூகுள் இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆனால் பங்குதாரர் வழக்கு தொடரவே, இத்தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் மீது ஒரு பங்குதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் நிறுவனத்தின் உயர் பதவி வகிப்பவர் தவறுதலாக நடந்ததற்கு அவரை பதவியில் இருந்து வெளியேற்றாமல் அவருக்கு வெளியில் தெரிவிக்க முடியாத அளவுக்கான தொகையை அளித்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

amit singhal

பாலியல் குற்றச்சாட்டு பிரச்சினையை கூகுள் நிறுவனம் எப்படி கையாள்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அமித் சிங்காலுக்கு 2 ஆண்டுகளுக்கு தலா 1.5 கோடி டாலரும் 3-ம் ஆண்டில் 50 லட்சம் டாலரிலிருந்து 1.5 கோடி டாலர் வரை இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஓராண்டுக்குப் பிறகு அவர் உபெர் நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஆனால் பாலியல் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவியில் இருந்தும் விலகினார்.

நிறுவனத்தில் பணியில் இருக்கும்போது தன்னிடம் தகாத முறையில் அமித் சிங்கால் நடந்து கொண்டதாக ஒரு பெண் பணியாளர் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து நிறுவன ரீதியாக விசாரணை நடத்தப்பட்டதில், சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று, அமித் சிங்கால் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பிறந்த அமித் சிங்கால், ஐஐடி ரூர்கி மாணவராவார். மின்னசோட்டா டுலுத் பல்கலையில் எம்எஸ் பட்டம் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google paid former executive $35m after sexual assault allegation.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.