Skip to main content

கட்டை விரல் முறிவு காரணமாக உலகக்கோப்பை அணியில் இருந்து ஷிகர் தவான் விலகல்!

ஷிகர் தவான்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், கட்டை விரல் எலும்பு முறிவு காரணமாக மூன்று வாரங்களுக்கு அணியில் இருந்து விலகல். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். நாளை மறுநாள் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. 

காயம் குறித்து பரிசோதித்த இந்திய அணி மருத்துவ குழு 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. 

shikhar dhawan

எனவே, ஜூன் மாதம் நடைபெற உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான இந்தியாவின் எதிர்வரும் போட்டிகளில் ஷிகர் தவான் விளையாட முடியாது என தெரிகிறது.

இதனையடுத்து தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Injured Shikhar Dhawan ruled out of World Cup 2019 for 3 weeks

shikhar dhawan

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.