Skip to main content

கடந்த ஆண்டை விட 15% குறைந்த சர்க்கரை உற்பத்தி!!!

இந்தியாவில் முந்தைய ஆண்டை விட 15% குறைந்த சர்க்கரை உற்பத்தி - இந்திய சர்க்கரை ஆலை சங்கம்

இந்திய சர்க்கரை ஆலை சங்கம் (ISMA) கூறுகையில், நவம்பர் 15 வரை இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 11.63 லட்சம் டன்னாக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட 15% குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 13.73 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. 

உத்தரபிரதேசத்தில் தாமதமான தொடங்கப்பட்ட பணிகள் காரணமாக சுமார் 15% உற்பத்தி குறைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலை சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய சர்க்கரை ஆலை சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 15, 2018 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 11.63 லட்சம் டன்னாக உள்ளது. இதுவே கடந்த நவம்பர் 15, 2017 இல் 13.73 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.

உத்திரபிரதேசம்

2018 ஆம் ஆண்டில் உத்திரபிரதேசத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் பெரும்பாலானவை, தாமதமாக நவம்பர் முதல் பாதியில் இருந்து தான் தங்கள் பணிகளை தொடங்கியது, ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 38 சர்க்கரை ஆலைகள் பணிகளை துவங்கியது.

பணிகள் தாமதமாக ஆரம்பித்ததன் காரணமாக, உத்திர பிரதேச சர்க்கரை ஆலைகள், நவம்பர் 15, 2018 வரை, 1.76 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்துள்ளன. இதே கடந்த நவம்பர் 15, 2017 வரையில் 5.67 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில், கடந்த சனிக்கிழமை வரை 71 சர்க்கரை ஆலைகள் மட்டுமே கரும்பு சாகுபடி செய்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 78 சர்க்கரை ஆலைகள் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUGARCANE

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சர்க்கரை ஆலைகள், நவம்பர் 15, 2018 வரை, 108 சர்க்கரை ஆலைகளில் 6.31 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன. இங்கு அக்டோபர் கடைசியில் பணிகள் துவங்கியது. இதே கடந்த நவம்பர் 15, 2017 வரையில் 3.26 லட்சம் டன் சர்க்கரை 160 சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா

கர்நாடக சர்க்கரை ஆலைகள், நவம்பர் 15, 2018 வரை, 36 சர்க்கரை ஆலைகளில் 1.85 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன. இதே கடந்த நவம்பர் 15, 2017 வரையில் 3.71 லட்சம் டன் சர்க்கரை 59 சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குஜராத்

குஜராத் சர்க்கரை ஆலைகள், நவம்பர் 15, 2018 வரை, 14 சர்க்கரை ஆலைகளில் 1.05 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன. இதே கடந்த நவம்பர் 15, 2017 வரையில் 80,000 டன் சர்க்கரை 15 சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகம்

தமிழக சர்க்கரை ஆலைகள், நவம்பர் 15, 2018 வரை, 4 சர்க்கரை ஆலைகளில் 60,000 டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன. இதே கடந்த நவம்பர் 15, 2017 வரையில் 17,000 டன் சர்க்கரை 6 சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Indian mills produce 11.63 lakh tonnes of sugar till mid-Nov says ISMA 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.