Skip to main content

கடைசி பந்தில் சமன் செய்த‌ மேற்கிந்திய தீவுகள் !!!

சமனில் முடிந்த இரண்டாவது ஒரு நாள் போட்டி !!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது. 

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்தியா தொடரை கைப்பற்றியது.

தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி புதன்கிழமை நடைப்பெற்ற 2வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கடைசி நேரத்தில் போட்டியை சமன் செய்தது.

321 ரன்கள் எடுத்த இந்தியா :

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி 157*, ராயுடு 73, ரோகித் சர்மா 29, தோனி 20 ரன் அடிக்க 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 321 ரன்களை குவித்தது.

மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் :

322 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிரண் பவல் 18, சதிரபால் ஹேம்ராஜ் 32 ரன்கள் என நல்ல தொடக்கம் கொடுத்தனர். மர்லன் சாமுவேல் 13 ரன்னில் விக்கெடை இழந்தார். 

சாய் ஹோப் மற்றும் சிம்ரொன் ஹெட்மெயர் இணை அதிரடியாக விளையாடினர். இவர்களின் ஜோடியால் இந்திய அணி திணறியது.

மேற்கிந்திய அணியின் சிம்ரான் ஹெட்மியர் 64 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகள் விளாசி 94 ரன்களை குவித்தார். இவரின் சிக்ஸர்களால் இந்திய பவுலர்கள் செய்வதறியாது தவித்தனர். 

சாய் ஹோப் சிறப்பாகவும், பொறுமையாக விளையாடி சதம் அடித்து (123*) அசத்தினார். 

50 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணியும் 321 ரன்களை மட்டுமே எடுத்ததால் போட்டி வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது. 

India vs West Indies 2 nd ODI became tie.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.