Skip to main content

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமனம்!

செந்தில் பாலாஜி

ஜனவரி 24 ஆம் தேதி செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தான் இருந்த அனைத்துக் கட்சிகளிலும் அம்மாவட்டத்தின் முக்கியப் புள்ளியாக விளங்கி வந்தார்.

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செந்தில்பாலாஜி தொடர்ந்து ஓரங்கட்டுப்பட்டு வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரண்டாக பிரிந்த அதிமுகவில், சசிகலா தலைமைக்கு ஆதரவு தெரிவித்தார் செந்தில் பாலாஜி. சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பிறகு, தினகரன் முகாமில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு வந்தார் செந்தில் பாலாஜி.

அதன் பிறகு தினகரன் சென்ற ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, முன்னணி நிர்வாகிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. திடீரென தினகரனுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக, அமமுக-விலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் தலைமையிலான திமுக-வில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி இணைந்தார் செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தான் இருந்த அனைத்துக் கட்சிகளிலும் அம்மாவட்டத்தின் முக்கியப் புள்ளியாக விளங்கி வந்தார்.

திமுக-வில் செந்தில் பாலாஜி இணைந்த பின்னரும், ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் அங்கு நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜனவரி 24 ஆம் தேதி செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கரூர் மாவட்ட கழகச் செயலாளர் நன்னியூர்இராஜேந்திரன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கரூர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் மாவட்டக்கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள், செந்தில் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Senthil Balaji made in-charge of DMK in Karur.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.