Skip to main content

கரிம வேளாண்மையை அதிகரிப்பதற்கான வழிகளை தேடும் மேற்கு வங்கம்!!

கரிம வேளாண்மை

மாநிலத்தில் கரிம வேளாண்மையை அதிகரிப்பதற்கு ஏற்ற வழிகளைத் தேடுவதில் மேற்கு வங்க மாநில விவசாயத்துறை தற்போது ஆர்வம் காட்டி வருகிறது.

கரிம வேளாண்மையை உயர்த்துவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக, ராதாத்திலக், தூத்ஸார், கலாபாத், கலோனூனியா போன்ற சில நறுமண அரிசி வகைகளை உற்பத்தி செய்வதில் அம்மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது, 17,807 ஹெக்டேர் நிலங்கள் கரிம வேளாண்மைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரிம வேளாண்மையின் கீழ் மற்றொரு 10,000 ஹெக்டேர் நிலங்களை கொண்டுவர மாநில விவசாயத்துறை திட்டமிட்டுள்ளது.

வேளாண் துறை அறிக்கையின் படி, 2016 - 2017 இல், இரசாயன உரங்களின் பயன்பாடு மாநிலத்தில் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த காலத்தில், ஹெக்டேருக்கு 190 கிலோ உரம் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இந்த அளவு 187 கிலோவாக குறைந்துள்ளது. கரிம உரங்களின் பயன்பாடு 1.5 மெட்ரிக் டன் ஹெக்டேரிலிருந்து 1.88 மெட்ரிக் டன் ஹெக்டேர் வரை அதிகரித்துள்ளது. கரிம உரங்களின் பயன்பாடு நறுமண அரிசி சாகுபடிக்கு மட்டுமே உதவும் என்று மாநில விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

West Bengal state agriculture department finding ways to increase organic farming in the state.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.