Skip to main content

கரையை கடந்தது "ஃபானி": இதுவரை 3 பேர் உயிரிழப்பு!

fani cyclone

ஒடிசாவில் கரையை கடந்த புயலுக்கு இதுவரை 3 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூரி மாவட்டத்தில் சாகிபொப்பல் காவல் நிலைய எல்லைப் பகுதிக்குட்பட்ட இடத்தில் ஒரு இளைஞர் மீது மரம் வீழ்ந்து கொல்லப்பட்டார். மேலும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்தபாலி இடையே உள்ள பூரி அருகே ஃபானி புயல் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

fani cyclone

ஃபானி புயல் கரையை கடக்கத் துவங்கிய நிலையில் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

புயல் நிவாரண நிதியாக முன்கூட்டியே 1000 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஒடிசாவிற்குப் பிறகு, மேற்கு வங்கம் மிக அதிகமான மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.

cyclone fani

இந்த புயல் காரணமாக ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புயல் மேற்குவங்கம் வழியாக, வங்கதேசம் நோக்கி செல்வதால், அங்கு மம்தா தனது தேர்தல் பிரச்சாரத்தை இரு நாட்களுக்கு ரத்து செய்துள்ளார். வங்கதேசமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

cyclone fani

புவனேஸ்வர் ரயில் நிலையம்

இந்த புயலில் புவனேஸ்வர் ரயில் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. புவனேஸ்வரில் இருந்து இப்போது வரைக்கும் ரயில் சேவை இல்லை.

இந்த சூழ்நிலையை மறுபரிசீலனை செய்த பின்னர், ரயில் சேவை துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும். பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த புயல் காரணமாக குறைந்தபட்ச சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Cyclone Fani: 3 dead in Odisha, storm headed towards Bengal

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.