Skip to main content

கோவிலில் பிரியாணி பிரசாதம்: 83 ஆண்டுகால பாரம்பரியம்!

கோவிலில் பிரியாணி

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமமான வடகம்பட்டியில், வழக்கத்திற்கு மாறான வருடாந்திர கோவில் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும், இந்த ஆட்டுக்கறி பிரியாணி பிரசாதம் பக்தர்களுக்கு மட்டுமல்ல; அந்த வழியாக செல்லும் அனைவர்க்கும் திருவிழா தினத்தன்று வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஜனவரி 25 ம் தேதி இந்த திருவிழா நடைபெற்றது. வடக்கம்பட்டிக்குச் செல்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி அன்பாக உணவளிக்கப்படும்.

இந்த முனியாண்டி ஸ்வாமி கோவிலின் மூன்று நாள் திருவிழா கொண்டாட்டத்தின் போது 2,000 கிலோகிராம் அரிசி மற்றும் ஆட்டிறைச்சி சமைக்கப்படுகிறது.

வடகம்பட்டியில் உள்ள அனைவரும் ஒரு பிரியாணி ரசிகர்கள். இதன் அடிப்படையில் தான் மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் உணவகம் அமைக்கப்பட்ட்டது, மேலும் இந்த உணவகம் தமிழகம் எங்கும் பல்வேறு கிளை உணவகங்களை கொண்டிருக்கிறது. 70 மற்றும் 80 களில் தமிழ் நாட்டில் வாழ்ந்த எவருக்கும் இந்த உணவகத்தின் பெயர் அனைவரையும் பழைய உணவு முறைகளை ஞாபகப்படுத்தும். ஒரு கட்டத்தில், இந்த உணவகம் தென்னிந்தியா முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்ததாக கூறப்படுகிறது, அதன் ஆடம்பரமான மட்டன் பிரியாணி சாப்பாட்டிற்கும், எங்கும் நிறைந்த சுவையான மட்டன் குழம்புகளுக்கும் அறியப்பட்டது.

இந்த முறை கடந்த 83 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

Temple in Briyani serves "Mutton Briyani" as prasad.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.