Skip to main content

கோவாவில் கணக்காளர் பதவிகளுக்கான தேர்வெழுதிய 8,000 பேர் தோல்வி

 கணக்காளர் பதவி

கோவா அரசின் 80 கணக்காளர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்குபெற்ற 8,000 தேர்வர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.

தேர்வில் பங்குபெற்றவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு 100 மதிப்பெண்களின் குறைந்த பட்சம் 50 மதிப்பெண்கள் பெற வேண்டும், ஆனால் தேர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட கோவாவின் கணக்காளர் இயக்குனரக அறிவிப்பில், இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட கணக்காளர் நியமனத் தேர்வில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எந்த ஒரு தேர்வாளரும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பொது பிரிவின் கணக்காளர் பதவிக்கு 80 பணியிடங்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டது. ஐந்து மணிநேர தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணக்கு பதிவியல் என அனைத்து பிரிவுகள் தொடர்பான கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் என வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இறுதி தேர்வுக்கு முன் நேர்காணல் சுற்றுக்கு தகுதி பெறுவர்.

ஆம் ஆத்மி கட்சியின் கோவா பொதுச் செயலாளர் பிரதீப் பாட்கோங்கர் இந்த சம்பவம் குறித்து  விமர்சித்தார், 8,000 வேட்பாளர்கள் தோல்வியுற்றது மாநில கல்வி முறையின் "சரிவு" என்றார். கோவா பல்கலைக்கழகம் மற்றும் இந்த பட்டதாரிகளை உருவாக்கும் வணிகத்துறை கல்லூரிகளுக்கு இது "பெரும் அவமானம்" என்று அவர் மேலும் கூறினார்.

8,000 candidates who have participated in the test conducted for the vacant of 80 accountant posts in Goa

have failed.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.