Skip to main content

கனடா உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 7ஆவது இடம்!

image

2017ஆம் ஆண்டின் உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்ததரப்படுத்தலை 156 நாடுகளில் வாழும் மக்களின் மகிழ்ச்சி, சுதந்திரம், ஆயுள் எதிர்பார்ப்பு, சமூக உதவி மற்றும் ஊழல் காரணிகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தரப்படுத்தலில் பின்லாந்து முதலிடத்திலும் அடுத்த மூன்று இடங்களில் நோர்வே, டென்மார்க். ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஐந்தாவது இடத்தில் சுவிஸ்லாந்து மற்றுமு; ஆறாவது இடத்தில் நெதர்லாந்தும் எட்டாவது இடத்தில் நியூசிலாந்;து, ஒன்பதாவது இடத்தில் சுவீடன் மற்றும் பத்தாவது இடத்தில் அவுஸ்திரேலியாவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இதில் முதலிடத்தை பிடித்த பின்லாந்தில் 5.5 மில்லியன் குடியேற்றவசரிகள் சந்தோசமாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil