Skip to main content

கனமழை எதிரொலி - ‍நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!!

கனமழை எதிரொலி - ‍நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!!

கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நவம்பர் 24 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை தொடர்வதால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகையில் விடுமுறை 

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் அதிகளவு பாதிப்பை சந்தித்துள்ளது.

RAIN IN COIMBATORE

புயல் தாக்கியது முதல், இம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதே போன்று இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், திருச்சி, தருமபுரி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Schools in Tamilnadu remains closed on November 24 due to heavy rain.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.