Skip to main content

கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க முடியாது ‍- மதுரை உயர்நீதிமன்றம்

கமல் ஹாசன்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

"அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து" என காந்தியை கொன்ற கோட்சேவை குறிப்பிட்டார் கமல். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், காவல் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

​    ​kamalhassan

இதையடுத்து பல்வேறு அமைப்புகளும், பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். 

bjp

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

Madurai Highcourt Refuses to Stay Kamalhassan's Election Campaign.

கமல் ஹாசன்
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.