Skip to main content

கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்தின் ஆயுள் தடை நீக்கம்‍!

sreesanth

2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் ஆயுள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீஷாந்தின் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

நீதிபதிகள் அஷோக் பூஷன் மற்றும் கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிக்கு 3 மாதத்துக்குள் ஸ்ரீஷாந்தை மறுபடியும் அணிக்கு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளது. 

உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவாக, "தடை நீக்கத்துக்கு பின் ஸ்ரீஷாந்துக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளது. 

sreesanth

இந்த வழக்கில் எந்தவித குற்ற‌ நடவடிக்கைகளும் இல்லை என்றும், ஐபிஎல் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அனைவரும் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ ஸ்ரீஷாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்குமாறு அவர் தரப்பில் கோரப்பட்ட மனுவின் கீழ் விசாரிக்கப்பட்டு, தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

"இது ஒரு மிகப்பெரிய போராட்டம், உச்சநீதிமன்றம் என் தடையை நீக்கியதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்'' என்று ஐபிஎல் மேட்ச் பிக்சிங் மீதான தடை நீங்கிய பின்பு ஸ்ரீஷாந்த் தெரிவித்துள்ளார்.

Supreme Court revokes life ban on Cricketer Sreesanth.

sreesanth

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.