Skip to main content

கேரளாவிலும் "சர்கார்" மீது வழக்குப்பதிவு !!!

கேரளாவிலும் "சர்கார்" மீது வழக்குப்பதிவு !!!

சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சுகாதாரத்துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. 

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம், பல பிரச்னைகள், வழக்குகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றது. 

இந்த படத்தின் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியான முதல் பிரச்னை தொடங்கி இன்றும் பிரச்னையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. 

படத்தில் இடம்பெற்றிருக்கும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் பல ஆர்பாட்டம், பேனர் கிழிப்புகளில் ஈடுபட்டது. 

கேரளாவில் வழக்கு பதிவு : 

தமிழகத்தில் தான் இப்படி என்றால், கேரளாவில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலம் திருச்சூரில் சுகாதாரத் துறையின் சார்பில் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டுள்ளனர். 

2 ஆண்டு சிறை தண்டனை:

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக அரசை விமர்சித்துள்ளதாக சர்கார் படத்தின் மீதான சர்ச்சைக்குப் பிறகு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு எதிராக தமிழகத்தின் அதிமுக அமைச்சர்களும், தொண்டர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை இத்திரைப்படத்தின் சில காட்சிகளில் விமர்சித்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆளும் அதிமுக அரசு, தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தீபாவளி வெளியீடான சர்கார் திரைப்படம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அவரது இலவசத் திட்டங்களை பற்றியும் தவறான முறையில் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.

அதிமுக அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய படக்காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்தினர். மேலும் படக்குழுவினர் இதற்கு இணங்க மறுத்துவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறினார்கள்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரைப்பட சங்கத் தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து காட்சிகளை நீக்க உத்தரவு கிடைத்துள்ளதாகவும், மேலு

Kerala Health Ministry Files a case against sarkar

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.