Skip to main content

கேமரூன் கடத்தல் விவகாரம் : 78 மாணவர்கள் விடுதலை

கேமரூன் கடத்தல்: 78 மாணவர்கள் விடுதலை

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பள்ளிக்கூடத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 

இதுகுறித்து  கேமரூன் அரசுத் தரப்பில், ”கேமரூனில் பமிண்டா பகுதியில்  பள்ளி ஒன்றில் மாணவர்கள் 78 பேர், ஆசிரியர்கள் 3 பேர் என 80 க்கும் மேற்பட்டோர் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட 78 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கேமரூனில் பிரிவினைவாதிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே அந்நாட்டு அரசுக்கு எதிராக தீவிரவாதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தக் கடத்தலில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஆங்கில மொழி பேசும் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளை மூட எச்சரிக்கை விடுத்த அங்கிளோபோனே எனப்படும் பிரிவினைவாத தீவிரவாதிகள் இந்த கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என கேமரூனின் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர்.

கேமரூன் கடத்தல்: 78 மாணவர்கள் விடுதலை

கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நடைபெற்ற இதுபோன்ற சம்பவத்தில், 11 சிறுவர்கள் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்திலும் கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரையில் தெரியவில்லை.

அவர்கள் அம்பஜோனியா என்றழைக்கப்படும் ஒரு சுயாதீன அரசை உருவாக்க கோரிக்கைவைத்தனர்.

கேமரூனில் உள்ள ஆங்கிலம் பேசும் குடிமக்கள் நீண்டகாலமாக ஒரு இனவாத பாகுபாடு அவர்கள் மீது சுமத்தப்படுவதாக குறைகூறினார்கள்.

அவர்கள் உயர்ந்த சிவில் சர்வீஸ் பணிகளில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாகவும், ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பினும், அரசாங்க ஆவணங்களை பிரஞ்சு மொழியில் மட்டுமே வெளியிடப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

Cameroon kidnap: Bamenda students freed

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.