Skip to main content

கேள்விக்குறியான அமேசான் மழைகாடுகள் - தற்போதைய நிலை என்ன?

amazon fire

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒரு அரணான அமேசான் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான தீவிபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

அமேசான் காட்டுத் தீ நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உலகம் முழுக்க சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிட்டது. 

அமேசான் மழைக்காடுகளின் முக்கியத்துவம் குறித்து இதுவரை அறியாத மக்களுக்கும், இப்போது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த காட்டுத்தீ. 

amazon fire

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ, அதிக அளவில் புகை மற்றும் கார்பனை வெளியேற்றுகிறது. தீயில் இருந்து வரும் புகைமூட்டங்கள் அமேசான் பிராந்தியத்தில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் பரவியுள்ளன. 

2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதுவரை காட்டுத்தீ 83% அதிகரித்துள்ளது என்று பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான INPE தெரிவித்துள்ளது.

அரசாங்க நிறுவனம் 72,843 தீவிபத்துகளை பதிவு செய்துள்ளது, இது 2013 ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக அதிகமான எண்ணிக்கையாகும். 

fire

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை ஆய்வுப்படி, அமேசான் காட்டுத் தீ, புகை அட்லாண்டிக் கடற்கரை வரை பயணிக்கிறது. 3200 கிலோ மீட்டர் தூரத்தில், உள்ள சாவோ பாலோவில் வானம் இருளாக மாறக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் 9,500 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ செயற்கைக்கோள்களால் கண்டறியப்பட்டுள்ளன.

#PrayforAmazonas உலகளவில் புதன்கிழமை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

Amazon burning: The sky never goes dark while the rainforest blazes

Tamil