Skip to main content

கேள்விக்குறியாக தமிழக சுகாதாரத்துறை - பிரசவத்தின் போது நடந்த கொடுமை!

பிரசவத்தின் போது நடந்த கொடுமை!

நாளுக்குநாள் கேள்விக்குறியாக மாறியுள்ளது தமிழக சுகாதாரத்துறை, கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பிரசவத்தின் போது குழந்தையின் உடல் துண்டாக பிரிந்து தாயின் வயிற்றில் சிக்கியது.

கர்ப்பிணி பெண் ஒருவர் மார்ச் 19 ஆம் தேதி இரவு பிரசவத்திற்கான கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், செவிலியர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார்.

ஆனால் பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானது, குழந்தையின் உடல் தாயின் வயிற்றுக்குள்ளேயே தங்கியது.

health care

குழந்தை இறந்த நிலையில், தற்போது அந்த பெண்ணிற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை மீது அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்பிணி பெண்ணிற்கு எச்ஐவி தொற்று பாதித்த ரத்தம் செலுத்திய விவகாரத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மீண்டும் இத்தகைய சம்பவம் அரங்கேறி உள்ளது.

Tamil Nadu Primary Health Care Centre in Koovathur killed a baby during delivery

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.