Skip to main content

காட்டுத்தீ மற்றும் வேளாண் நிலங்களை கண்காணிக்க ரோபோ!

Shravan Poovaiah

மைசூரில் உள்ள தேசிய பொறியியல் கல்லூரியில் பி.இ (மெக்கானிக்கல்) படிக்கும் பொறியியல் மாணவர் ஷ்ரவன் விவசாய துறைக்கு பெரிதும் பயன்படும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஷ்ரவன் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.

இந்த ரோபோ விவசாய தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை கண்காணிக்கவும், வேளாண் நிலங்களில் காட்டு விலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் தீ குறித்த எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுகிறது.

இது ஒரு ஆளில்லா நிலத்தடி வாகனம், அனைத்து இடங்களுக்கும் நகர்வதற்கு இதற்கு நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது,

ஒரு சிம் மற்றும் கேமராவுடன் வீடியோக்களை பதிவு செய்வதற்காக ஒரு சிறிய கைப்பேசியைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோபோவின் முன்மாதிரி ஒரு கேமராவைக் கொண்டுள்ளது, இது விவசாய பகுதி முழுவதிலும் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடியது.

ரோபோட்டானது 360 டிகிரியில் சுழற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வீடியோக்களை கைப்பற்றும், மற்றும் அதன் உரிமையாளர் உலகின் எந்த பகுதியில் இருந்துகொண்டும் ரோபோவுடன் இணைக்க வடிமைக்கப்பட்டுள்ளது.

ரோபோவுடன் இணைக்கப்பட்டவுடன், உரிமையாளர் நான்கு திசைகளிலும் வாகனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த அலைபேசியில் (எண்கள் 2, 8, 4 மற்றும் 6) ஐப் பயன்படுத்தலாம்.

செல் போன்களில் விளையாடும் விளையாட்டு போன்று இதை பயன்படுத்தமுடியும். இதன் எடை 1 கிலோவிற்கும் குறைவாக உள்ளது. பயன்பாட்டிற்கு மிகவும் கச்சிதமாக இருக்கும்.

மழை உட்பட எந்தவொரு வானிலை சூழ்நிலையிலும் இந்த ரோபோ செயல்படும். இது சூரிய சக்தி பேட்டரிகள் கொண்டு இயங்கும்.

இதன் விலை ரூ 3,000 ஆகும். இதனை கொண்டு வேளாண் பகுதியில் தீ ஏற்படுவது, மிருக நடமாட்டம் மற்றும் காட்டு தீ போன்றவற்றையும் சரிபார்க்க உதவும். 

20-year-old student develops robot to monitor farms, forest fires

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.