Skip to main content

காஷ்மீர் பனிப்பொழிவு: குறைந்தபட்சமாக -31.4 டிகிரி செல்சியஸ் பதிவு

காஷ்மீர் பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் உள்ள டிராஸ் நகரத்தில் இன்று -31.4 டிகிரியாக வெப்பநிலை பதிவாகி உள்ளது। சமீப காலத்தில் மிக மிக குறைந்த வெப்பநிலையாக இது பதிவாகி இருக்கிறது.

நேற்று அதிகபட்சமாக டிராசில் -10 .1 டிகிரி செல்சியஸ் குளிர் காணப்பட்டது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் காணப்படுகிறது. இது இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் -3.5 டிகிரியும், பகல்காமில் -13 டிகிரியும், குல்மார்க்கில் -12 டிகிரியும் பதிவாகி இருந்தது.

லேவில் -15.5 டிகிரியும், கார்கில் பகுதியில் -20.7 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது.   

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனவரி 22 ஆம் தேதி, காஷ்மீர் பகுதியில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டதால், ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோல் கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள கர்தங்கில் இன்று ஜனவரி 18 ஆம் தேதி காலை பனிச்சரிவு ஏற்பட்டது. லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு உலகிலேயே மிகவும் உயரத்தில் இருக்கும் சாலைகள் என்ற பெயர் உண்டு.

பனிச்சரிவு ஏற்பட்டபோது சொகுசு கார் ஒன்று அதில் சிக்கிக் கொண்டது. அதில் 10 பேர் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாநில பேரிடர் மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். 

கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குளிர் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

அங்கு கடந்த இரண்டு மாதங்களாக பனி பொலிவு இருந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Cold wave sweeps Kashmir; Drass coldest with -31.4 °C, Srinagar recorded -3.5 °C

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.