Skip to main content

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார் !!

காங்கிரஸ் கட்சி தலைவர் சஜ்ஜன் குமார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார், இன்று டிசம்பர் 18 ஆம் தேதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இதுகுறித்த தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்டார். அவர் சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை போராட்டங்கள் நடந்தது.

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் எழுந்தது. மேலும், விகாஸ்புரி காவல் நிலையத்திலும் சஜ்ஜன் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், சஜ்ஜன் குமார் மீதான குற்றச்சாட்டுக்களை டிசம்பர் 17 ஆம் தேதி உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

எனவே, தண்டனை பெற்றுள்ளதால் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகுவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Congress leader Sajjan Kumar resigns from Congress primary membership on December 18.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.