Skip to main content

காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெரும் வழிமுறைகள்

காளான் வளர்ப்பு

இன்றைய இளைஞர்கள் மற்றும் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காளான் வளர்ப்புத் தொழிலில் அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் அழகுகண்ணன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் அண்மையில் நடைபெற்ற காளான் வளர்ப்புப் பயிற்சியில் பேசிய அவர், காளான்களில் மாட்டுக் காளான், சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் ஆகிய ரகங்கள் உள்ளதாகக் கூறினார். காளான் உற்பத்தியில், குழல் அமைக்கும் முறை என்பது காளான் உற்பத்தியைப் பொறுத்து அமைக்க வேண்டும். காளான் குழலை கிழக்கு மேற்காக அமைத்தால் வெப்பத்தை குறைக்கலாம்.

காளான் வளர்க்கும் முறையில் காற்றோட்டமான சூழ்நிலை இருத்தல் வேண்டும். காளான் குழலை கண்டிப்பாக இரண்டு அறைகள் கொண்டதாக அமைக்க வேண்டும்.

குழல்களில் 20 -280 டிகிரி வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஈக்கள் புகாத வண்ணம் நைலான் வலைகளை பயன்படுத்த வேண்டும்.

காளான் விதைகள் பயன்படுத்தும் பொது நம் தரமிக்க விதைகளைத் தன பயன்படுத்த வேண்டும். இந்த விதைகள் அனைத்து விவசாயப்பண்ணைகளிலும் கிடைக்கும்.

இவ்வாறு, அனைத்து முறையான வழிமுறைகளையும் மேற்கொண்டு காளான் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டால் அதிக லாபம் ஈட்டி பயன்பெறலாம்.

The Methods to cultivate Mushroom and get more profit.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.