Skip to main content

காசோஜி கொலை சவுதி அரசால் திட்டமிட்டு செய்யப்பட்டது ‍- ஐ.நா விசாரணைக் கமிஷன்

காசோஜி கொலை

பத்திரிகையாளர் காசோஜி சவுதி அரசால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டது ஆதாரத்துடன் நிரூபணம் ஆகியுள்ளது என ஐ.நா-வின் விசாரணைக் கமிஷன் அறிவித்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்-ன் சவுதி அரேபியாவுக்கான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், அமெரிக்க உளவுத்துறை ஆய்வில், ஜமால் காசோஜி சவுதி இளவரசர் முகமதுவின் உத்தரவின் பெயரில் அவரது ஆட்களால் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சவுதி இளவரசர் ஏற்கவில்லை. சவுதி அரசும் இக்குற்றச்சாட்டை மறுத்தது. இதையடுத்து அமெரிக்க உளவுத்துறை மூலம் கிடைத்த ஆதாரங்களையும், துருக்கி அரசிடம் உள்ள ஆதாரங்களையும் இணைத்து துருக்கி அரசு காசோஜியின் மரணத்துக்கு நியாயம் கேட்கத் தொடங்கியது.

விளைவு, பிரச்னை ஐ.நா-விடம் சென்றது. இதையடுத்து ஐ.நா-வால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் தான் தற்போது காசோஜியின் மரணம் சவுதியாலே நிகழ்ந்தது எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரையில் சவுதியிடமிருந்து இக்குற்றச்சாட்டுக்கு எவ்வித பதிலும் வெளியாகவில்லை.

அக்டோபர் 2 ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் சென்ற கசோஜி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இவர் சவுதி மன்னரை பற்றி விமர்சித்து செய்தி வெளியிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

சவுதியிலிருந்து 15 பேர் கொண்ட குழு அரசு விமானம் மூலம் அக்டோபரில் இஸ்தான்புல் அமீரகத்துக்கு சென்றுள்ளது. அவர்கள் ஜமால் காசோஜியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இஸ்தான்புல் வந்ததாக கூறப்படுகிறது.

அவர்களோடு பிரேதத்தை சுத்தப்படுத்தும் இருவரும் வந்ததாக கூறப்பட்டது.

மேலும் ஜமால் காசோஜி கொலை செய்யப்பட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குள் அவரின் உடல் வெட்டப்பட்ட நிலையில் துருக்கியை விட்டு வெளியேற்றப்பட்டதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"கொலை செய்தவர்கள் ஜமால் காசோஜியின் உடலை ஆசிட்டில் கரைத்துவிட்டார்களா" என்ற விசாரணையும் நடந்து வருகிறது

மேலும் இந்தக் கொலை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை குற்றம் சாட்டுகிறார். "இளவரசர் தான் கொலைக்கு உத்தரவிட்டார்" என்று தெரிவித்துள்ளார். 

இந்தக் கொலை ரியாத்தின் சர்வதேச வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மேற்கத்திய நாடுகளாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா சவுதி மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

Saudi crown prince told aide he would use ‘a bullet’ on Khashoggi: report

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.