Skip to main content

ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் "ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு"!

sco summit

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வரும் ஜூன் 13 மற்றும் 14-ந் தேதிகளில் 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது சீனா தலைமையிலான எட்டு உறுப்பினர்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு புரிந்துணர்வு அமைப்பாகும்.

இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறுள்ளன. 2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

putin and jinping

இந்த சந்திப்பின் போது பயங்கரவாத எதிர்ப்பு, ஆப்கானிஸ்தானில் நிலைமை, பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே ஜூன் 14 ஆம் தேதி சந்திப்பு நிகழும் என கூறப்படுவது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

india vs pakistan

பிராந்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO) சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக யுத்தம் மற்றும் ஈரான் மீது அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் தாக்கம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trade war to figure in talks between Modi, Xi and Putin at SCO meet

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.