Skip to main content

ஜூலை 5-ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

Nirmala Seetharaman

நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

எனவே நாடாளுமன்றத்தின் வடக்கு வளாகத்தில் இருக்கும் நிதி அமைச்சகம் வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் பூட்டப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான ஜூலை 5 வரை இதே நிலையில்தான் நிதி அமைச்சகம் இருக்கும். 

2019- 2020 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இந்த காலக்கட்டத்தில்தான் நிதி அமைச்சகம் உருவாக்கும். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் முன்னர் கடந்த பிப்பரவரி மாதம் 1 ஆம் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

union budget 2019-20

தற்போது 5 ஆண்டுக்கான அரசு அமைந்துள்ளதால், புதிதாக நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜூலை 5 தேதி முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். 

வரும் ஜூலை 17 முதல் 26 வரை, 17வது லோக்சபாவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.

Nirmala Sitharaman will present the first Budget of the Modi 2.0 government on 5 July.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.