Skip to main content

ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது "சந்திரயான் 2"!

இஸ்ரோ விண்வெளி மையம்

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் அறிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008 -ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. 

அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. 

அதில் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. 

ரூ.800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 திட்டம் வெற்றி பெற்றதால் விண்வெளித் துறையில் நாட்டுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

chandrayan2

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலம் தயார் நிலையில் உள்ளது.

விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகின்றன.

சந்திரயான் - 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளையும் ஜிஎஸ்எல்வி எம்கே - 3 ராக்கெட் சுமந்துசெல்கிறது.

இதில் லேண்டருக்குவிக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறும்.

விண்ணில் ஏவப்பட்ட 14 - வது நாளில் சந்திரயான்-2 நிலவை எட்டி ஆய்வுகளை தொடங்கும். 

chandrayan

சந்திரயான் - 2 தான் நிலவின் தெற்குபகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் முதல் விண்கலம். 

இந்த ப‌குதியில் இதுவரை உலகில் வேறு எந்த நாடும் ஆய்வு செய்ததில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட சந்திரயான் - 1 விண்கலத்தை விட, சந்திரயான் - 2 தொழில்நுட்ப அளவில் அதிகவளர்ச்சி பெற்றதாக உருவாக்கப்பட்டுள்ள‌து.

சந்திரயான் -2 விண்கலம் ரூ.603 கோடி செலவிலும், அதனை செலுத்தும் ஜிஎஸ்எல்வி எம்கே - 3 ராக்கெட் ரூ.375 கோடிசெலவிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 3.8 டன் ஆகும்.

Chandrayaan 2 to be launched on July 15: ISRO

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.