Skip to main content

ஜூலை 11 இல் இயக்குனர் விஜய்க்கு மறுமணம்!

இயக்குனர் விஜய்க்கு இரண்டாம் திருமணம்

இளையதளபதி விஜய் நடிப்பில் "தலைவா", அஜித் நடிப்பில் "கிரீடம்", "தெய்வத்திருமகள்", "சைவம்","தேவி", "மதராச பட்டினம்" போன்ற பல வெற்றி படங்களை அளித்துள்ளார் இயக்குனர் விஜய்.

சில வருடங்களுக்கு முன்பு 2014 இல் இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 

மூன்று வருடங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

விவாகரத்துக்குப்பின், அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதேபோல் விஜய்யும் படங்களை இயக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குனர் விஜய்க்கு இரண்டாம் திருமணம்

இந்நிலையில் மறுமணத்துக்கு இயக்குனர் விஜய் சம்மதித்துள்ளார். அவர் மணக்க இருக்கும் பெண்ணின் பெயர், ஐஸ்வர்யா. சென்னையை சேர்ந்த சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள்.

இவர், "எம்பிபிஎஸ்" பட்டம் பெற்ற மருத்துவர். பொதுநல மருத்துவராக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடைபெற உள்ளது. 

Director AL Vijay's marriage date fixed!

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.