Skip to main content

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு!

modi meets shinzo abe

ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானிய பிரதிநிதி ஷின்சோ அபேவை நேரில் சந்தித்தார், இரு தலைவர்களும் இருநாடுகளுக்கிடையே உள்ள பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகள் உட்பட பல பகுதிகளில் வலுவான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த உறுதியளித்தனர்.

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார் இந்திய பிரதமர் மோடி. ரஷ்ய தூர கிழக்கு பிராந்தியத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி தற்போது பெறுகிறார்.

ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜி -20 உச்சி மாநாட்டிலும், பிரான்சில் பியாரிட்ஸில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டிலும், சந்தித்த பின்னர் பிரதமர் மோடிக்கும் அபேவுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

அபே உடனான சந்திப்பைத் தொடர்ந்து, மலேசியாவின் பிரதமர் மகாதீர் பின் மொஹமத் மற்றும் மங்கோலியா ஜனாதிபதி கல்ட்மகின் பட்டுல்கா ஆகியோருடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.

20 வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு பொருளாதார மன்றத்தின் (இஇஎஃப்) ஐந்தாவது கூட்டத்தில் பங்கேற்க மோடி புதன்கிழமை (September 2) ரஷ்யா சென்றடைந்தார்.

இந்த உச்சி மாநாடு ரஷ்ய தூர கிழக்கு பிராந்தியத்தில் வணிகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

மேலும் பிராந்தியத்தில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நெருக்கமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான மகத்தான ஆற்றலை முன்வைக்கிறது.

PM Modi meets Japanese PM Shinzo Abe in Russia

Tamil