Skip to main content

ஜன்தன் வங்கி டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியை எட்டியது!

ஜன்தன் வங்கி திட்டம்

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு தொடங்க வசதியாக பிரதம மந்திரி ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்தார்.
 
அதே 2014 ஆண்டு, ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த வங்கி கணக்கு விபத்து காப்பீடு வசதி கொண்டது. ரூபே டெபிட் கார்டு வசதியும் உண்டு. வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக ரொக்கமாக (ஓவர் டிராப்ட்) எடுக்க முடியும். மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை இந்த வங்கி கணக்கு வழியாக பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் குறைந்தபட்ச இருப்புத்தொகை, வங்கி கணக்கில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

 

ஜன்தன் வங்கி திட்டம்

 

பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, கடந்த 3-ந் தேதி நிலவரப்படி ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1 லட்சத்து 495 கோடியே 94 லட்சம் ஆகும்.

Deposits in Jan Dhan accounts cross ₹1-trillion mark

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.