Skip to main content

ஜம்முவில் நான்காம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - அமைதியாக நடந்து முடிந்தது!!!

ஜம்முவில் நான்காம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - அமைதியாக நடந்து முடிந்தது!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு மாநிலத்தில் 2,600 வாக்குப்பதிவு மையங்களில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒன்பது கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், நான்காவது கட்ட வாக்குப்பதிவு இன்று நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது.  

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒன்பது கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், நான்காவது கட்ட வாக்குப்பதிவு இன்று நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது.  

காஷ்மீர் பிரிவில் 639 வாக்கு மையங்களிலும், ஜம்மு பிரிவில் 1,979 வாக்கு மையங்களிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 2,618 இடங்களுக்கு ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிமுதல் மதியம் 2 மணி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது.

777 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றம் நிறைந்தவை என கூறப்பட்டது - அதில் காஷ்மீர் பிரிவில் 571 மையங்களும் மற்றும் ஜம்மு பிரிவில் 206 மையங்களும் அடங்கும்.

நான்காம் கட்ட தேர்தலில், 5239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 99 சார்பன் இடங்களும் மற்றும் 969 பஞ்சாயத் இடங்களும் இந்த கட்டத்தில் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட பஞ்சாயத்து தேர்தலில், காஷ்மீர் பிரிவில் 64.5%, ஜம்மு பிரிவில் 79.4% வாக்குகள் என மொத்தம் 74.1% பதிவாகியுள்ளன.

நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில், 71.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு பிரிவில் 80.4 சதவீத வாக்குப்பதிவும், காஷ்மீர் பிரிவில் 52.2 சதவீத வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில், 75.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு பிரிவில் 83.0 சதவீத வாக்குப்பதிவும், காஷ்மீர் பிரிவில் 55.7 சதவீத வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Voting underway for fourth-phase of J&K panchayat polls

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.