Skip to main content

ஜம்முவில் மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் !!!

ஜம்முவில் மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் !!!

இன்று நவம்பர் 24 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி வரையில் 36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  

சனிக்கிழமை இன்று நடைபெறும் மூன்றாவது கட்ட பஞ்சாயத்து தேர்தலில், மதியம் 12 மணி வரையில் 35.8 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

ஜம்முவின் கந்தர்பால், புத்காம், பாரமுல்லா, குப்வாரா, பந்திபோரா ஆகிய ஆறு மாவட்டங்களில் மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. குளிர் காரணமாக மெதுவாக நடைபெற்று வந்த தேர்தல், பின் சூடுபிடிக்க துவங்கியது.

அதிகபட்சமாக வடக்கு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் மதியம் 12 மணிவரையில், 50.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. எனினும், அதே சமயம் கந்தர்பால் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில்  முறையே 9.1% மற்றும் 14% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

பிரிவினைவாதிகளின் கோட்டையாக கருதப்படும், சோபூரில் 22.5% வாக்குகள் பதிவாகியுள்ளது.

காஷ்மீரின் கார்கில் மற்றும் லே பகுதிகளில், கடும் குளிரிலும் முறையே 55.3% மற்றும் 39.1% வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மூன்றாம் கட்ட தேர்தலில், 5239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 358 சார்பன் இடங்களும் மற்றும் 1652 பஞ்சாயத் இடங்களும் உள்ளன. 96 sசார்பன் மற்றும் 1,437 பஞ்சாயத்துகள் இந்த கட்டத்தில் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட பஞ்சாயத்து தேர்தலில், காஷ்மீர் பிரிவில் 64.5%, ஜம்மு பிரிவில் 79.4% வாக்குகள் என மொத்தம் 74.1% பதிவாகியுள்ளன.

நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில், 71.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு பிரிவில் 80.4 சதவீத வாக்குப்பதிவும், காஷ்மீர் பிரிவில் 52.2 சதவீத வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

J&K panchayat polls: 36% turnout in third phase till noon

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.