Skip to main content

ஜம்முவில் இரண்டாம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்!!!

ஜம்முவில் இரண்டாம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்!!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின், இரண்டாம் கட்ட பஞ்சாயத்துத் தேர்தலின் வாக்குப்பதிவு 2,100 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்று வருகிறது.

ஒன்பது கட்டமாக நடத்தப்படும், கட்சி சார்பற்ற இந்த பஞ்சாயத்து தேர்தல்கள், கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்ற அரசியலமைப்பின் சட்டம் 35-வது பிரிவின் கீழ், சட்டரீதியான சவால் காரணமாக தேர்தலில் போட்டியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரிவில் 828 வாக்குச் சாவடிகள், ஜம்மு பிரிவில் 1,351 வாக்குச் சாவடிகள், மாநில அளவில் 2,179 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

281 சார்பன் பணியிடங்கள் மற்றும் 1,286 பஞ்சாயத் பணி இடங்களுக்கு இரண்டாவது கட்டமாக 4,014 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த கட்டத்தில் 90 சார்பன் மற்றும் 1,069 பஞ்சாயத் பணி இடங்கள் இந்த தேர்தலில் சேர்க்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் 490 வாக்குச் சாவடிகளும், ஜம்முவில் 111 வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

காஷ்மீரில் 490 வாக்குச் சாவடிகளும், ஜம்முவில் 111 வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சார்பன் இடங்களுக்கு 3,29,818 வாக்காளர்களும், பஞ்சாயத் தொகுதிகளில் 2,07,796 வாக்காளர்களும் இருப்பதாக தெரிவித்தனர்.

தேர்தல்களின் சுமூகமாக நடைபெறும் வகையில், பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து முன் ஏற்பாடுகளும் சரிவர செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Second phase of panchayat polls under way in Jammu Kashmir.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.