Skip to main content

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உறைநிலையை விட குறைந்த வெப்பநிலை

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உறைநிலையை விட குறைந்த வெப்பநிலை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அதிகமான பனிப்பொழிவு வியாழக்கிழமை டிசம்பர் 13 ஆம் தேதி, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையானது உறைநிலையை விட குறைவாக பதிவாகியுள்ளது.

பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஜவஹர் சுரங்கப்பாதையின் இருபுறமும் பனிச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சுமார் 300 கி.மீ. நீள நெடுஞ்சாலையில் புதன்கிழமை டிசம்பர் 12 ஆம் தேதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குஜிகுண்ட், கோக்ர்நாக், பஹல்கம் மற்றும் முகல் ரோடு போன்ற பள்ளத்தாக்கின் முக்கிய பகுதிகளில் இரவு நேர பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்முவை இணைக்கும் மாற்று வழியான முகலாய சாலையிலும், பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

லடாக் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கை இணைக்கும் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜோசாலாவில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸ்ரீநகரைத் தவிர ஜம்மு மற்றும் லடாக் பகுதியின் இரவு நேர வெப்பநிலை உறைநிலையை விட குறைந்து பதிவாகியது.

ஸ்ரீநகரில் டிசம்பர் 12 ஆம் தேதி நேற்று இரவு 0.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது, ​​அதுவே செவ்வாய்க்கிழமை டிசம்பர் 11 ஆம் தேதி இரவு 0.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜிகுண்ட் - பள்ளத்தாக்கு நுழைவாயில் பகுதியில் - குறைந்தபட்சம் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. கோக்ரனாக் பகுதியில் மைனஸ் 1.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.

மாநிலத்தில் மிகவும் குளிரான பகுதியாக குல்மார்க் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 13 வியாழக்கிழமை முதல் வானிலை சீராக வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில் வானிலை வறண்டு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minimum temperatures drop below freezing point in Jammu and Kashmir

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.