Skip to main content

ஜம்மு காஷ்மீர் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர் அரசு காஷ்மீர் பிரிவில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று மாத கால குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவின் படி, 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை டிசம்பர் 6, 2018 முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி வரை அளித்துள்ளது.

மேலும் 9 ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

செய்முறை தேர்வுகள் இருப்பின், அவற்றை முடித்துவிட்டு, விடுமுறை எடுத்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமை கல்வி அதிகாரி அறிவித்த அட்டவணையின் படி, பயிற்சியளிக்க வேண்டிய அதிகாரிகள் பயிற்சித் திட்டங்களில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக, பிப்ரவரி 22, 2019 அன்று ஆசிரியர்கள் முன்கூட்டியே பள்ளியில் வருகை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல், காலை மற்றும் இரவு நேரங்களில் மூடுபனி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை உறைபனி வெப்பநிலையை அடைய செய்துள்ளது. எனவே பள்ளிகளுக்கு குளிர் கால விடுமுறை அறிவித்துள்ளது அம்மாநில பள்ளிக்கல்வி துறை.

Winter holidays announced for Jammu Kashmir school for the period of 3 months.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.