Skip to main content

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து ஜவான்களுக்கும் இனி விமான சேவை!

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய ரிசர்வ் படை மற்றும் மற்ற துணை ராணுவப்படையினர் இனி விடுப்பில் செல்லும்போதும், விடுமுறை முடிந்து பணியில் மீண்டும் சேரும்போதும், அவர்கள் அனைவரும் ஆகாய மார்க்கமாக பயணம் செய்ய இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி வியாழனன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 40 மத்திய ரிசர்வ் படை வீரர்களை உயிர்பலி வாங்கிய ஜம்முவின் புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"தில்லி-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-தில்லி, ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர்-ஜம்மு ஆகிய வழித்தட மார்க்கமாக செல்லும் மத்திய ஆயுதக் காவல் படையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் விமானப் பயணத்தின் உரிமையை அங்கீகரிக்கப்படுகிறது" என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

கான்ஸ்டபிள், தலைமை கான்ஸ்டபிள் மற்றும் உதவி துணை ஆய்வாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கையில் சுமார் 7.8 லட்சம் துணைப்படை ஊழியர்கள் உடனடியாக பயனடைவார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

jawans

பிற பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏற்கனவே இந்த சலுகை நடைமுறையில் உள்ள நிலையில், முன்னதாக கான்ஸ்டபிள், தலைமை கான்ஸ்டபிள் மற்றும் உதவி துணை ஆய்வாளர் பணிகளில் உள்ளவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது பணியில் இருந்து விடுப்பில் செல்லும்போதும், விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும்போது பயன்படுத்தமுடியும்.

மத்திய ஆயுத காவல் படைகளுக்கான ஏர்லைன் கூரியர் சேவைக்கான விமானத்தின் கூட்டாக இந்த விமான சேவை துவங்கப்படுகிறது. தில்லி, ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளிலிருந்தும் படை வீரர்களுக்காக முழு விமானமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pulwama Attack Aftermath: Govt Allows Air Travel for Jawans of CRPF, Other Forces Deployed in hmir

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.