Skip to main content

ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து 47 பேர் பலி!!!

ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து 47 பேர் பலி!!!

தென்கிழக்கு ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் மோதியதில் குறைந்தபட்சம் 47 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு நகரமான முத்தாரில் இருந்து தலைநகர் ஹாராரே நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தும், அதற்கு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த பேருந்தும் ​​​​ருசபே நகரில் விபத்துக்குள்ளானது.

ஹராரே-மூத்தேர் நெடுஞ்சாலையில் 166 கி.மீ. தூரத்திலுள்ள பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட  47 பேர் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை செய்தி தொடர்பாளர் பால் நியாட்டி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகம்

ஜிம்பாப்வே போக்குவரத்து துறை அமைச்சர் பிக்ஜி மாடிசா இச்சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

ஜிம்பாப்வேயில் போக்குவரத்து விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்ற ஒன்று.

சமீபத்திய ஆண்டுகளில் ஜிம்பாப்வேயில் பல விபத்துகள் நடந்திருக்கின்றன. அதில் ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் 43 பேர் இறந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் எட்டு பயணிகள் இறந்தனர் மற்றும் 53 பேர் காயமடைந்தனர்.

At least 47 killed after two buses collide in Zimbabwe

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.