Skip to main content

ஜிமெயில் "இன்பாக்ஸ்" செயலி ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது!

gmail

அடுத்த மாதம் முதல் கூகுள் நிறுவனம், ஜிமெயில் ‘இன்பாக்ஸ்' செயலிக்கும் மூடுவிழா நடத்த உள்ளது. இது குறித்து சென்ற ஆண்டே, கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தாலும், சரியாக எந்த நாளுடன் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. 

இன்பாக்ஸ் செயலி, ஒரு நாளில் அதிக மின்னஞ்சல் செய்பவர்களுக்கும் அதிக மின்னஞ்சல்களுக்கு ரிப்ளை செய்பவர்களுக்கும் ஏதுவான வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று.

செயலியின் சேவை நிறுத்தம் குறித்து, கூகுள் ஆப் மூலமே தகவல் தெரிவித்து வருகிறது. 

கடந்த சில மாதங்களாக கூகுள் நிறுவனம், இன்பாக்ஸ் செயலியில் இருக்கும் பல வசதிகளை ஜிமெயில் செயலிக்கே கொண்டு வரும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது.

gmail

சில பயனர்கள், பழைய இன்பாக்ஸ் செயலியை அப்டேட் செய்யாமல் வைத்திருந்தால், அப்படியே பயன்படுத்தலாம் என்று நினைக்கலாம்.

ஆனால் அந்த செயலியின் சில அடிப்படை சேவைகள் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட உள்ளதால் பழைய செயலியை உபயோகிப்பதும் முடியாத காரியமாகவே இருக்கும். 

இன்பாக்ஸ் செயலியை இதுவரை உபயோகிக்காதவர்கள், அது எப்படி இருக்கும் என்று பார்க்க நினைத்தாலும், ப்ளே ஸ்டோரில் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. 

இன்பாக்ஸ் செயலியை கூகுள் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்து பல சுவாரஸ்ய புதுப்பிப்புகளை இன்பாக்ஸ் செயலிக்கு கூகுள் அளித்து வந்தாலும், அது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

அதனால்தான் செயலியை முற்றிலுமாக நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.

Google's Inbox by Gmail app will apparently shut down by April 2.

gmail

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.