Skip to main content

ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

terrorist arrested

உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையான இன்று (February 22) லக்னோவில் 2 பேர் கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ஷானவாஸ் அகமது. இவர் ஜம்மு காஷ்மீரின் குல்காமை சேர்ந்தவர். இவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர் என்று கருதுவதாக உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி ஓ.பி. சிங் கூறியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை வெளியிட முடியாது என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக வீரர்கள் சிவச்சந்திரன், சுப்ரமணியன் உள்பட 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

up terorist

நூதனமுறை தாக்குதல் 

காஷ்மீரின் பிரதான நகரமான ஸ்ரீநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சுமார் 2,500 ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற 70 வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சுமார் 300 மற்றும் 350 கி.கி (660-770 லக்) வெடிகுண்டுகள் கொண்ட ஒரு கார் இந்த ரிசர்வ் படை வாகனத்தின் மீது மோதச்செய்து இந்த சம்பவத்தை தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்திய நேரப்படி மதியம் 3.15 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு 

இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

புல்வாமாவிலுள்ள ககபோராவிலிருந்து அடில் அஹ்மத் என்ற பயங்கரவாதியை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

அவர் 2018 ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்தார். உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் பலர் காயமடைந்தனர்; இந்த குண்டு வெடிப்பில் வீரர்களின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வீசியெறியப்பட்டது.

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, அவந்திபோரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Two Suspected Jaish-e-Mohammed Terrorists From Kashmir Arrested In UP, Says Police

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.