Skip to main content

ஜாலியன்வாலா பாக் படுகொலை: நூறு வருடங்களுக்கு பிறகு வருத்தம் தெரிவித்தது பிரிட்டன்!

ஜாலியன்வாலா பாக்

சுதந்திர வரலாற்றில் இன்னும் ரத்தக்கறையாக படிந்துள்ள சம்பவம் ஜாலியன்வாலா பாக் படுகொலைகள். இந்தக் கோர சம்பவத்தின் 100 ஆம் ஆண்டு நினைவுதினம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஜாலியன்வாலா பாக் படுகொலை வரலாறு 

ஜாலியன்வாலா பாக் படுகொலை அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது ஜாலியன்வாலா பாக் பூங்கா என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

ஜாலியன்வாலா பாக்

 

பைசாகி பண்டிகை நாளன்று ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது, பிரிட்டன் ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரி தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.

அப்போது மிரண்டு ஓடிய மக்கள் அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து சாக நேர்ந்தது.

jallian wala bagh​  ​    ​
உய்ரிதப்பிக்க அப்பாவி மக்கள் குதித்த கிணறு 

இந்தக் கொடூரமான சம்பவத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் இறந்தனர்.

10 நிமிடங்கள் வரை நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 1650 முறை சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மொத்தம் 379 பேர் இறந்ததாக பிரிட்டன் அரசு அறிவித்தது. ஆனாலும் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

​    ​jalian wala bagh massacre

தேவை இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தி மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படுத்தியதாக ஜெனரல் டயர் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்தது .

இந்த சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு இதுவரை வருத்தம் தெரிவிக்காமல் இருந்தது. இருப்பினும், பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

theresa may

பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம்

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 100 ஆம் ஆண்டு நினைவு தினம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்தர போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக இளைஞர்கள் பெருவாரியாக இந்த சம்பவத்தின் தாக்கத்தினால் கிளர்ந்து எழுந்தனர்.

theresa may

அப்படிப்பட்ட கொடூரமான சம்பவம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி அதிகாரபூர்வமாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

After 100 Years, Britain 'Regrets' Jallianwala Bagh Massacre That Killed Hundreds Of Indians jallianwala bagh massacre image widget

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.