Skip to main content

இரவு நேர வேலைகளால் பாதிக்கும் டிஎன்ஏ!

நமது டிஎன்ஏ-வை சேதப்படுத்தும் இரவு நேர வேலைகள்!

இன்றைய சூழ்நிலையில் பகல் இரவு என அனைத்து நேரங்களிலும் மாறி மாறி பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். இரவு நேரத்தில் பணியாற்றுவது அந்த நபரின் டி.என்.ஏவை (DNA) சேதப்படுத்தும், புற்றுநோயின் அபாயத்தையும், இதய உயிரணு, வளர்சிதை மாற்றத்தையும், நரம்பியல் நோய்களையும் அதிகரிக்கும் என ஒரு ஆய்வு அதிரிச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது 

பத்திரிகை அனஸ்தீசியாவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெவ்வேறு நேரங்களில் 49 ஆரோக்கியமான முழு நேர டாக்டர்களின் இரத்த பரிசோதனைகள் ஆராயப்பட்டன.

"இந்த வேலை மிகவும் ஆரம்பமானதாக இருந்தாலும், நீண்ட நாள் நோயின் வளர்ச்சிக்காக பங்களிக்கும் ஒரு சிறிய நிகழ்வு தூக்கமில்லாத அந்த ஒரு இரவில் கூட தூண்டப்படலாம் என்பதில் இதில் இருந்து தெளிவாகிறது," என ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் சியு-வேய் சோய்ஐ கூறினார்.

ஒரே இரவில் வேலை செய்ய வேண்டிய தேவை உள்ள டாக்டர்கள் உடம்பில் குறைந்த DNA சரிசெய்யும் மரபணு வெளிப்பாடு உள்ளது. மேலும் இரவில் வேலை செய்யாதவர்களைவிட இரவு பணியாற்றுபவர்களுக்கு டிஎன்ஏ இடைவெளிகளைக் கொண்டிருப்பதாகவும், சேதம் அடைந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த தூக்கமில்லாத ஒரு இரவில், டி.என்.ஏ. சரிசெய்யும் மரபணு வெளிப்பாடு குறைந்தது, அதனால் தூக்கமின்மையால் உடைந்த டிஎன்ஏ சரியாகவில்லை, அதன் விளைவாக அந்த ஒரு இரவு தூக்கத்திற்கு பிறகு டிஎன்ஏ சேதமடைந்தது.

இந்த டி.என்.ஏ சேதம் புற்றுநோய்க்கான ஆபத்து மற்றும் இருதய நோய்கள், வளர்சிதை மாற்றங்கள், மற்றும் தூக்கமின்மை தொடர்பான நரம்புகள் மற்றும் நரம்பியல் நோய்கள் ஆகியவற்றிற்கு வித்திடும்.

Night shifts may cause DNA damage: study

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.