Skip to main content

இறுதி கட்ட மக்களவை தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்!

இறுதி கட்ட மக்களவை தேர்தல்

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் மே 19 ம் தேதி 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த 7 ஆம் கட்ட தேர்தலில் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

7 th phase election

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் - மே 19 - மொத்தம் 59 தொகுதிகள் 

1. பீகார் - 8 தொகுதிகள்.
2. ஜார்க்கண்ட் - 3 தொகுதிகள்.
3. மத்திய பிரதேசம் - 8 தொகுதிகள். 
4. பஞ்சாப் - 13 தொகுதிகள்.
5. மேற்கு வங்கம் - 9 தொகுதிகள்
6. சண்டிகர் - ஒரு தொகுதி
7. உத்தர பிரதேசம் - 13 தொகுதிகள்
8. இமாசல பிரதேசம் - 4 தொகுதிகள்

7 th phase election

இதனுடன் தமிழகத்தில் விட்டுப்போன திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை அனைத்தும் மே 23 ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதி கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் களம் காண்கிறார்.

தேர்தல் பரப்புரை இன்று முடிவுக்கு வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் பல்வேறு இடங்களில் உச்சகட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Campaigning for Final Phase of LS Elections Ends This Evening

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.