Skip to main content

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் - அதிகபட்சமாக புதுவையில் 78 % வாக்குப்பதிவு!

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி நடந்தது.

ஏப்ரல் 18 ம் தேதி 2-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

95 தொகுதிகளில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

5 th phase election

அதிகபட்சமாக புதுச்சேரியில் 78 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுவையை அடுத்து மேற்கு வங்கத்தில் 76.07 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது, 72 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 15 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

election

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதேபோன்று, ஒடிசா சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 35 தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 66 % வாக்குகள் பதிவாகியுள்ளது.  

66% polling recorded for 2nd phase of Lok Sabha elections

5 th phase election
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.