Skip to main content

இராணுவ நர்சிங் சேவை அலுவலர்களுக்கு "முன்னாள் ராணுவ வீரர்" அந்தஸ்து!

military nursing service

நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, இராணுவ நர்சிங் சேவையில் (Military Nursing Service) பணியாற்றும் செவிலியர்களுக்கும், அலுவலர்களுக்கும் "முன்னாள் படைவீரர்"களின் அந்தஸ்தை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இராணுவ நர்ஸ் சேவை 1943 ஆம் ஆண்டு முதல் ஒரு துணைப் படையாக அமைக்கப்பட்டது. இந்த படையில் பெண்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் செவிலியர் பணியை மேற்கொள்வர். இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் இவர்கள் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர்.

military service

பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ நர்சிங் சேவையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு அனைத்து சலுகைகளையும் விரிவுபடுத்துவதில் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளதுடன், ஆயுதப்படைகளில் உள்ள மற்ற துறைகளின் அலுவலர்களின் அந்தஸ்தை வழங்கியுள்ளது.

அதில் ஒருபகுதியாக சேவை அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களில் ஸ்டார் தட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

Ex-servicemen status for Military Nursing Service officers says defence ministry

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.