Skip to main content

ஈரானின் காவல்துறை தலைமையகம் அருகே தற்கொலை படை தாக்குதல்

தற்கொலை படைத் தாக்குதல்

ஈரானில் காவல்துறை தலைமையகம் அருகே தற்கொலை படைத் தாக்குதலில் 2 காவல்துறையினர் உயிரிழந்தனர்.

சபாஹர் துறைமுக நகரில் உள்ள காவல்துறை தலைமையகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த நபர் திடீரென காரை வெடிக்க செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் 2 காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காவல்துறை உயர் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தற்கொலை படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக ஈரான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஈரானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

A suicide car bomber attacked a police headquarters in the southeastern Iranian port city on Dec 6.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.