Skip to main content

இறைவனின் திருப்பொருத்தத்தை பெற - புனித ரமலான் நோன்பு!

புனித ரமலான் நோன்பு!

ரம்ஜான் நோன்பு நேற்று மே 5 ஆம் தேதி துவங்கியது, வரும் ஜூன் 4 ஆம் தேதி வரை நோன்பு கடைபிடிக்கப்படும்.

மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.

முக்கிய கடமைகள்

கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய முக்கிய கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

holy month of ramadan

இதில் முக்கியமாக குறிப்படத்தக்கது ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் வரும் ரமலான் நோன்பு.

ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அப்போது "இறை நம்பிக்கையாளர்களே அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நன்மை உங்களுக்கு உண்டு. 

அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல் பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கியுள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கியுள்ளான்.

ramzan

இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச்செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்.

இந்த மாதத்தின் முதல் 10 நாட்கள் அருள்பொழியும் நாட்கள், அடுத்த 10 நாட்கள் பாவ மன்னிப்பு கிடைக்கும் நாட்கள், கடைசி 10 நாட்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெறத்தகுதியான நாட்கள்" என்று நபிகளார் கூறியுள்ளார்.

புனித ரமலான் நோன்பு!

நோன்பு காலம்?

நேற்று அம்மாவாசை அன்று துவங்கிய நோன்பு, புதிய முழு நிலவு அதாவது பௌர்ணமி காணப்படும் வரை 29 முதல் 30 நாட்களுக்கு நீடிக்கும். 29 வது நாளின் இரவில் சந்திரன் காணப்படாவிட்டால், இந்த நோன்பு 30 நாட்களுக்கு நீடிக்கும்.

எப்போது நிறைவடையும்?

ரம்ஜான் நோன்பு நேற்று மே 5 ஆம் தேதி துவங்கியது, வரும் ஜூன் 4 ஆம் தேதி வரை நோன்பு கடைபிடிக்கப்படும்.

இந்த ஆண்டு மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான முஸ்லீம் நாடுகளுக்கு, ஜூன் 3 ஆம் தேதி திங்கள்கிழமை ரமலான் நோன்பின் 29 வது நாளாக இருக்கும்.

இந்த நாடுகள் அன்றைய தினத்தின் இரவில் முழு நிலவு தோன்றினால், ஜூன் 4 ஆம் தேதி அன்று ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் அனுசரிக்கப்படும்.

அதுவே ஜூன் 3 ஆம் நாள் இரவு நிலவு முழுமை அடையவில்லை என்றால் ஜூன் 5 ஆம் நாள்  ஈத் பெருநாள் கடைபிடிக்கப்படும். ஜூன் 5 ஆம் நாள் கொண்டாடும் பட்சத்தில் ரமலான் நோன்பு முழுமையாக 30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டதாக இருக்கும்.

Ramadan 2019: Why is it so important for Muslims?

ramzan fasting month

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.