Skip to main content

இந்தியன் 2: மீண்டும் சேனாதிபதி‍யாக கமல்!

இந்தியன் 2: மீண்டும் சேனாதிபதி‍யாக கமல்!

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஷங்கர் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார். இதில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் தோன்றுகிறார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். மற்றொரு கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும்.

இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.

indian 2 crew

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரிடம் பேசி வருகிறார்கள். இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வட இந்தியாவிலும் 2.0 படம் நல்ல வசூல் பார்த்தது.

இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து இன்னும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்தியன்-2 படத்தின் வயதான கமல் தோற்றத்தையும், வர்ம குறியீட்டையும் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று ஜனவரி 18 ஆம் தேதி துவங்கியது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் ரஜினியின் "பேட்ட" படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் பேரனாக நடிக்கும் சித்தார்த் 

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களும் உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு கமல்ஹாசனின் பேரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எதிர்பாராத சில காரணத்தால் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த் மீண்டும் 16 வருடங்கள் கழித்து சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"Indian 2": Kamal Haasan as Senapathy with Shankar and entire team

indian 2

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.