Skip to main content

இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் "மோர்டல் என்ஜின்ஸ்"

இந்தியாவில் முன்கூட்டியெ வெளியாகும் "மோர்டல் என்ஜின்ஸ்"

பிலிப் ரிவே என்பவர் எழுதிய நாவல் ‘மோர்டல் என்ஜின்ஸ்'. தற்போது, இந்த நாவலை மையமாக வைத்து, இதே பெயரில் ஹாலிவுட் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கிரிஸ்டியன் ரிவெர்ஸ் இயக்கியுள்ளார். இதில் ஹீரா ஹில்மர், ராபர்ட் ஷீகன், ஹியுகோ வீவிங், ஜிஹேய் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனை ‘யுனிவர்சல் பிக்சர்ஸ்' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட 2 டிரெய்லர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

"மோர்டல் என்ஜின்ஸ்" படத்தில் ஜாக்சன் ஒரு தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார், ஹாபிட் படத்தின் திரைக்கதை எழுதிய பிரான் வால்ஷ் மற்றும் பிலிப் பாய்ன்ஸ் ஆகியோருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

mortal engines

படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் டப் செய்துள்ளனர். ஏற்கெனவே, படத்தை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே டிசம்பர் 7-ஆம் தேதி இந்தியாவில் வெளியிட‌ படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா நிறுவனம் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட உள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Peter Jackson-produced Mortal Engines to premiere in India on 7 December, a week before its US release

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.