Skip to main content

இந்தியாவில் குண்டும் குழியுமான சாலைகளால் 14,926 பேர் பலி !!

குண்டு குழி சாலைகள்

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் குண்டும், குழியுமான சாலைகள் காரணமாக 14,926 பேர் உயிரிழந்துள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

டிசம்பர் 6, 2018 நீதிபதி மடான் பி. லோகூரின் தலைமையில் உள்ள நீதிமன்ற அமர்வில், குண்டும் குழியுமான சாலைகளின் காரணமாக ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவ்வாறு இறப்பது எல்லைகளில் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதை போன்றதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதிபதி தீபக் குப்தா மற்றும் ஹேமந்த் குப்தா உள்ளிட்டோர் தெரிவித்தனர். மேலும், குண்டு குழிகளால் ஏற்பட்ட சாலை விபத்துக்களிலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை முறையாக பராமரிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினர்.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசின் ஒப்புதல் வேண்டி சாலை பாதுகாப்பு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது.  

SC expresses concern over 14,926 deaths due to potholes in last 5 years on December 6.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.