Skip to main content

இந்தியாவை நோக்கி படையெடுக்கும் கட்டணம் இல்லா "லாம்ப்டா பள்ளிகள்"!

lambda online coding school

"லாம்ப்டா பள்ளி" என்பது ஒரு ஆன்லைன் கோடிங் கல்வி நிறுவனம் ஆகும். இங்கு கல்வி பயில மாணவர்கள் எந்த தொகையும் செலுத்தவேண்டியது இல்லை. மாணவர்கள் அவரவர் படிப்பு முடிந்து ஒரு பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்த பிறகு மட்டுமே அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த நிறுவனம் தரவு அறிவியல் (Data Science), மொபைல் பயன்பாடுகள் (Mobile Applications), இணையதள வடிவமைப்பு (UX Design) போன்ற பிரிவில் பயிற்சி வழங்குகிறது.

lambda

"வருமான பகிர்வு ஒப்பந்தம்"

இதற்கு மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. மாறாக அவர்கள் "வருமான பகிர்வு ஒப்பந்தம்" (Income Sharing Agreement) ஒன்றில் கையெழுத்திடவேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின் படி வேலைகிடைத்த பிறகு, அவர்கள் வாங்கும் சம்பளத்தில் 17% தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு லாம்ப்டா கல்வி நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும். 

lambda schools

இந்திய கல்வி சந்தையின் திறன் மற்றும் நாளுக்கு நாள் மாறி வரும் கற்றல் முறையை வைத்து கணிக்கும் போது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக லாம்ப்டா கல்வி நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கும் என்று லாம்ப்டா கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனத்தின் இணை நிறுவனருமான 29 வயது ஆஸ்டின் ஆல்ரெட் தெரிவித்துள்ளார்.

நிறுவனம் துவங்கப்பட்டத்தில் இருந்து இதுவரை 250 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 1300 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவில் மட்டும் 10,000 மாணவர்களை கொண்டதாக இந்நிறுவனம் திகழும் என ஆஸ்டின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

lamba online coding school

இதே முறையை இந்தியாவிலும் பின்பற்ற இருப்பதாக ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 20 மாணவர்களை கொண்டும், பிறகு மாணவர்களை கணிசமாக அதிகரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

After US, India will be our second largest market by year end: Lamda School CEO and Co-Founder Austin Allred.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.